எல்லையில் வீரர்களை குறைப்பதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை- பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் ஒப்புதல்

காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது.இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர்கள் (DGMO) மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புதல்.
எல்லையில் வீரர்களை குறைப்பதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை- பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் ஒப்புதல்
Published on

இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.

4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.

தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது,

இந்நிலையில், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை தொடங்கியது.

இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே 2வது முறையாக ராணுவ இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, இந்திய - பாக். எல்லையில் வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்ய, உடனடி நடவடிக்கைகளை பரிசீலிக்க இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர்கள் (DGMO) மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு தரப்பிலும், ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்தும் இன்றைய பேச்சுவார்த்தையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com