search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீடு தேடி வரும் சாக்லேட் பரிசு
    X

    கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீடு தேடி வரும் 'சாக்லேட்' பரிசு

    • நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.
    • வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    மும்பை:

    கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று 'சாக்லேட்' அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-

    கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

    அதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லேட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் சில்லரை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் சில்லரைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.

    Next Story
    ×