ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்- பிரதமர் மோடி

இந்தியாவின் முப்டைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட் என்றார் பிரதமர் மோடி.ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினர்.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்- பிரதமர் மோடி
Published on

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அவர் பேசியதாவது:-

இந்தியாவின் முப்டைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட். ஆபரேஷன் சிந்தூரை நமது வீரர்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றி பெறச் செய்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

இந்தியாவின் நடவடிக்கையை பயங்கரவாதிகள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும்.

இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி தகர்த்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com