ஆந்திராவில் கழுதை கறி என கூறி குதிரை இறைச்சி விற்பனை- 7 பேர் கைது

ஒவ்வொரு குதிரையில் இருந்தும் 60 முதல் 70 கிலோ இறைச்சி கிடைக்கும்.
ஆந்திராவில் கழுதை கறி என கூறி குதிரை இறைச்சி விற்பனை- 7 பேர் கைது
Published on

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை இறைச்சிக்கு அதிக தேவை உள்ளது. அதை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது என்று பலர் நம்புகிறார்கள்.

பல இடங்களில் கழுதை கறி விற்பனை நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோல் பகுதியில் கழுதை இறைச்சி என கூறி குதிரை இறைச்சியை விற்று வந்த 7 பேர் கொண்ட கும்பலை நேற்று போலீசார் கைது செய்தனர்.

3 குதிரைகள் மற்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன. 4 ஆட்டோக்கள் மற்றும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு கழுதையின் விலை ரூ.40,000 என்றால், ஒரு குதிரையின் விலை ரூ. 15,000 ஆகும். பந்தயத்திற்குப் பொருந்தாத கலப்பினக் குதிரைகள் செருகுப்பள்ளியில் விற்கப்படுகின்றன.

ஒவ்வொரு குதிரையில் இருந்தும் 60 முதல் 70 கிலோ இறைச்சி கிடைக்கும். ஒரு கிலோ இறைச்சியை ரூ. 600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்துள்ளனர். தற்போது, ​​கழுதைகளைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. மறுபுறம், குதிரைகள் விலை மலிவானவை மற்றும் அதிக எடை கொண்டவை. அதனால் கலப்பின குதிரைகளை வாங்கி கறி விற்பனை செய்ததாக கைதான கும்பல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com