அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை தொடங்கியது

ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது.
amarnath yatra
அமர்நாத் யாத்திரை
Published on

இமயமலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் இந்து மதக்கடவுள் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்து உள்ளது.

ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது.

அமர்நாத் யாத்திரை

இந்த குகைக்கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கி உள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் 28-ந் தேதி வரை 57 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது. அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியுள்ள நிலையில் பால்தல், பஹல்காம் முகாம்களில் இருந்து முதல் குழுவாக 10 ஆயிரம் பேர் அமர்நாத் குகைக்கோவில் செல்லும் பயணத்தை தொடங்கினர்.

வழிபாடு

இயற்கையாக உருவான பனிலிங்கம் அமைந்துள்ள அந்தக் குகைக் கோவிலில் அவர்கள் வழிபாடு செய்வார்கள். யாத்திரை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, இரு வழித் தடங்களிலும் போலீசார், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் பிற துணை ராணுவப் படைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யாத்திரையையொட்டி, ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் பக்தா்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆகஸ்டு 28-ந்தேதி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com