இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு- போக்குவரத்து பாதிப்பு

கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு- போக்குவரத்து பாதிப்பு
Published on

இமாச்சல பிரதேசம்:

இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு இடங்களில் இருந்து வந்த 700 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Source: Himachal Pradesh… pic.twitter.com/wb9ZfKh6H6

X

Maalai Malar
www.maalaimalar.com