19 வயது கல்லூரி மாணவி நடுரோட்டில் தலை துண்டித்து கொலை - கொலையாளி கைது | Himachal pradesh

பைக்கில் அங்கு வந்து சாலையில் வைத்தே கழுத்தில் கடியால் தாக்கி தலையை துண்டித்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான்.
19 வயது கல்லூரி மாணவி நடுரோட்டில் தலை துண்டித்து கொலை - கொலையாளி கைது | Himachal pradesh
Published on

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டம், சர்காகாட் பகுதியில், பத்தொன்பது வயது கல்லூரி மாணவி ஒருவர் நேற்று தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட பெண், நைனா கிராமத்தைச் சேர்ந்த சியா குலேரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சியா குலேரியா நேற்று காலை 9 மணியளவில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அவரை சாலையில் தலையை துண்டித்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான்.

இதன்பின் அங்கிருந்து அவன் தப்பி ஓட முயன்றபோது, ​​அப்பகுதி மக்கள் அவனைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் சாலையில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த உடலைக் கைப்பற்றியுள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை அவனிடமிருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com