அரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

21 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு, சிறுவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Haryana Borewell Tragedy
Published on

இன்றைய காலகட்டத்தில் ஆழ்துளை கிணறு கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களில் மூடப்பட்டு வரும் நிலையில், அதற்குள் விழுந்து பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

அந்த வகையில்,அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் நிர்வைர் என்ற நான்கு வயது சிறுவன் நேற்று காலை தனது தாத்தா மற்றும் தந்தையுடன் வயல்வெளிக்கு சென்றான். அப்போது தாத்தா வேலை செய்துகொண்டிருக்க நிர்வைரின் தந்தை தான் கொண்டுவந்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிறுவன் விளையாட சென்றான். சற்று தொலைவில் சென்ற இச்சிறுவன் ஒரு குழியை கண்டு உள்ளன. அவன் விளையாட்டுத்தனமாக அதன் அருகே சென்று மண்ணை அள்ளி அதில் வீசிக்கொடண்டிருந்தான். ஈரப்பதமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக, மண் சரிந்து உள்ளே விழுந்தான்.

இந்நிலையில் கூச்சல் சத்தம் கேட்டு அவனது தாத்தாவும் தந்தையும் ஓடிவந்து பார்த்தனர். அது ஒரு திறந்த ஆழ்த்துளை கிணறு. இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஒன்று சென்று சிறுவனை தூக்க முயற்சித்தனர். கிராமத்தினரின் முயற்சி தோல்வி அடையவே, காலை 7.30 மணியளவில் மீட்பு பணி அதிகாரிகளுக்கு தங்கள் தெரிவித்தனர்.

விவரம் அறிந்து, துணை ஆணையர் அஜய் சிங் தோமர் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவத்தின் மீட்புக் குழுக்கள் விரிவான மீட்புப் பணியைத் தொடங்கின.

21 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிறுவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் ஒன்பது அங்குல விட்டமுள்ள இந்த ஆள்துளைக் கிணறு 220 அடி ஆழம் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினார்.

மேலும் ஆழ்துளைக்கிணறை திறந்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com