வைரலாகும் வாழைப்பழ பானிபூரி- விமர்சனங்கள் குவிகிறது

தெருவோர வியாபாரி தனது வாடிக்கையாளர்களுக்கு வாழைப்பழம் கலந்து பானிபூரி தயார் செய்து வழங்குகிறார்.வீடியோவை பார்த்த பயனர்கள் கடும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
வைரலாகும் வாழைப்பழ பானிபூரி- விமர்சனங்கள் குவிகிறது
Published on

வட இந்திய உணவு வகைகளில் ஒன்றான பானிபூரி தற்போது நாடு முழுவதும் மக்கள் விரும்பி சாப்பிடும் ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக சிறுவர்களை அதிகம் கவர்ந்துள்ள பானிபூரிக்கு வேக வைத்த உருளைக்கிழங்கு, புளிப்பு, காரம் கலந்த மசாலா தண்ணீர் சேர்த்து வழங்கப்படும். சிலர் பானிபூரிக்கு கூடுதலாக வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள். சமூக வலைதளங்களில் பானிபூரி தயாரிப்பு தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகிறது. அவற்றில் சில வீடியோக்கள் உணவு பிரியர்களிடையே கடும் விமர்சனங்களை சந்திக்கிறது. அது போன்ற ஒரு வீடியோ தற்போது பரவி வருகிறது.

குஜராத்தை சேர்ந்த முகம்மது பியூச்சர் வாலா என்ற டுவிட்டர் பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தெருவோர வியாபாரி தனது வாடிக்கையாளர்களுக்கு வாழைப்பழம் கலந்து பானிபூரி தயார் செய்து வழங்குவதை காண முடிகிறது. வேக வைத்த உருளைக்கிழங்கிற்கு பதிலாக அவர் வாழைப்பழங்களை பயன்படுத்தி உள்ள நிலையில், வீடியோவை பார்த்த பயனர்கள் கடும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒரு பயனர், என்னடா இது பானிபூரிக்கு வந்த சோதனை என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com