தெலுங்கானாவில் போராட்டத்தில் தீக்குளித்த அரசு பஸ் டிரைவர் பலி

தெலுங்கானா அரசு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தெலுங்கானாவில் போராட்டத்தில் தீக்குளித்த அரசு பஸ் டிரைவர் பலி
Published on

தெலுங்கானா மாநில அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கானா அரசு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நர்சம் பேட்டை பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்தவர் சங்கர் கவுட் (வயது 55). அரசு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு தாமதப்படுத்துவதை கண்டித்து நடந்த போராட்டத்தில் தீக்குறித்தார்.

உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்க முடியாமல் சங்கர் கவுட் அங்கும் இங்குமாக ஓடினார். தொழிற்சங்கத்தினர் சங்கர் கவுட் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக வாரங்கல்லில் உள்ள எம்.ஜி.எம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு சங்கர் கவுட் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தொழிற்சங்கத்தினர் இது போன்ற துயர சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com