ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி..! ரூ.1,000-லிருந்து ரூ.7,500-ஆக உயரும் PF பென்ஷன்

பி.எப். நிறுவன வட்டாரங்களின் தகவலின்படி, இந்த விவகாரம் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி..! ரூ.1,000-லிருந்து ரூ.7,500-ஆக உயரும் PF பென்ஷன்
Published on

குறைந்தபட்ச பி.எப். ஓய்வூதியத்தை ரூ.7 ஆயிரத்து 500 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிராவிடெண்ட் பண்ட் (பி.எப்) பென்ஷன் குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாயாக உள்ளது. தொழிலாளர்கள் ஊதியத்தில் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும் பி.எப் நிதியில் ஒருபகுதி பென்ஷன் திட்டத்துக்காக சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு பென்ஷன் திட்டத்துக்காக ஒருவரின் ஊதியத்தில் அதிகபட்சம் 2014-ம் ஆண்டு வரை மாதம் 541 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இது 1,250 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

குறைந்தபட்சம் தொழிலாளர் வைப்பு நிதியில் 10 ஆண்டுகள் கணக்கு வைத்திருந்தால் அவருக்கு பென்ஷன் கிடைக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும்நிலையில் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.950 கோடி செலவாகிறது.

தற்போதைய தொகை அடிப்படை வாழ்வாதாரத்துக்கு போதுமானதல்ல எனக் கூறி, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்களும் ஓய்வூதியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வந்தன. இதன்பேரில் மத்திய அரசு ஓய்வூதியத்தை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.

பி.எப். நிறுவன வட்டாரங்களின் தகவலின்படி, இந்த விவகாரம் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றக் குழுவின் ஆதரவும் இந்த முன்மொழிவுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com