தங்கம் வாங்கித்தருவதாக ரூ.32 லட்சம் மோசடி - 'கோல்டுமேன்' சுரேஷ்குமார் கைது

குறைந்த விலைக்கு வெளிநாட்டில் இருந்து தங்கத்தை வாங்கி தருகிறேன் என்று பலரிடமும் பணம் வசூல் செய்துள்ளார் சுரேஷ்குமார்.
Goldman Sureshkumar
Published on

ஐதராபாத் ஓல்டு சிட்டியை சேர்ந்தவர் பல்லபு சுரேஷ்கு மார் என்கிற சூர்யா பாய். இவர் அதிகமான தங்க நகைகளுடன் வலம் வருவதால் இவருக்கு கோல்டுமேன் சுரேஷ்குமார் என்ற பெயரும் உண்டு. தற்போது இவர் மீது தங்கம் வாங்கித்தருவதாக ஏமாற்றிவிட்டதாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பணம் மோசடி

குறைந்த விலைக்கு வெளிநாட்டில் இருந்து தங்கத்தை வாங்கி தருகிறேன் என்று பலரிடமும் பணம் வசூல் செய்துள்ளார் சுரேஷ்குமார். ஆனால் வாக்குறுதி அளித்தபடி தங்கம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் பணம் கொடுத்தவர்கள் அவரை நேரடியாக சந்தித்து முறையிட்டு உள்ளனர். அப்போது அவர் ஏதேதோ காரணங்களை கூறியதுடன், 3 ஐபோன்களும், 20 லட்ச ரூபாய்க்கு காசோலையும் கொடுத்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி உள்ளார். பின்னர் ஒரு கும்பல் வந்து மிரட்டி அவர் கொடுத்த செல்போன்களையும். காசோலையையும் பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சுரேஷ்குமார் சுமார் ரூ.32 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கோல்டுமேன் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com