கங்கா தசரா: அயோத்தி சரயூ நதியில் மக்கள் புனித நீராடல் | Video

கங்கை நதி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்த நாள் கங்கா தசராவாக கொண்டாடப்படுகிறது.
கங்கா தசரா: அயோத்தி சரயூ நதியில் மக்கள் புனித நீராடல் | Video
Published on

இந்து மத நம்பிக்கையில் கங்கை நதி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்த நாள் கங்கா தசராவாக கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டில் இந்த விழா நேற்று (மே 25) தொடங்கியது. மே 28 வரை இவ்விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

இந்த புனித விழாவையொட்டி கங்கை மற்றும் அதன் கிளை நதியை ஒட்டிய புனித தளங்களில் மக்கள் வழிபாடு செய்து புனித நீராடுகின்றனர்.

அந்த வகையில் இன்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் குவிந்த ஏராளமான பக்தர்கள் அங்கு பாயும் சரயூ நதியில் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து புனித நீராடினர்.

உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஊடாக பாயும் சரயூ நதி கங்கை நதியின் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கிளை நதிகளில் ஒன்றாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com