எரிபொருள் விலை உயர்வு - பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

ஆன்லைன் உணவு டெலிவிரி நிறுவனமான சொமேட்டோ தனது ஒரு ஆர்டருக்கான தனது ப்ளாட்ஃபார்ம் ஃபீயை (பயன்பாட்டு கட்டணம்) உயர்த்தியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு - பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!
Published on

ஆன்லைன் உணவு டெலிவிரி நிறுவனமான சொமேட்டோ, ஒவ்வொரு ஆர்டருக்கும் பயனர்களிடமிருந்து வசூலிக்கும் செயலி பயன்பாட்டுக் கட்டணத்தை (platform fee) ரூ. 2.40 உயர்த்தியுள்ளது.

அதன்படி பயன்பாட்டு கட்டணம் தற்போது ஒரு ஆர்டருக்கு ரூ.14.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.12.50 வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறுவனம் இந்த கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் உயர்த்தியுள்ளது.

சொமேட்டோவின் போட்டி நிறுவனமான ஸ்விக்கி ஒரு ஆர்டருக்கு வரி உட்பட ரூ.14.99 பயன்பாட்டு கட்டணமாக வசூலிக்கிறது. மத்திய கிழக்கில் தொடரும் போரால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

இதனை காரணமாக கொடனு, தற்போது இந்த உணவு நிறுவனங்களும் தங்களது கட்டணங்களை உயர்த்தி வருகின்றன.

சமீபத்தில் ரேபிடோ நிறுவனத்தால் தொடங்கப்பட்ட'Ownly' உணவு டெலிவிரி செயலியில், டெலிவரி கட்டணத்தைத் தவிர, வாடிக்கையாளர்களிடமிருந்தோ அல்லது உணவகங்களிடமிருந்தோ வேறு எந்த கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படாது என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பயன்பாட்டு கட்டணம் என்றால் என்ன?

பயன்பாட்டு கட்டணம் (Platform Fee) என்பது ஆன்லைன் செயலிகள் (Apps) அல்லது இணையதளங்கள் தங்கள் சேவையை வழங்குவதற்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் ஒரு கூடுதல் கட்டணமாகும்.

இது உணவு டெலிவரி (Food Delivery), மளிகை பொருட்கள் (Quick Commerce) மற்றும் நிதிச் சேவைகள் போன்ற பல்வேறு தளங்களில் தற்போது பொதுவான ஒன்றாக மாறியுள்ளது. 

இது டெலிவரி செய்பவருக்கோ அல்லது உணவகத்திற்கோ செல்வதில்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட செயலியை (உதாரணமாக: Swiggy, Zomato, Zepto) நிர்வகிக்கும் நிறுவனத்திற்குச் செல்கிறது.

நாம் செய்யும் ஒவ்வொரு ஆர்டரின் போதும், உணவு அல்லது பொருளின் விலை மற்றும் டெலிவரி கட்டணத்திற்கு மேல் இது கூடுதலாகச் சேர்க்கப்படும்.

செயலியின் பராமரிப்பு செலவுகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிப்பதற்காக இந்தக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com