எரிபொருள் விலையேற்றம் - 6 வழித்தடங்களில் விமான சேவையை நிறுத்தும் ஏர் இந்தியா!

விமானப் போக்குவரத்துத் துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், கடும் அழுத்தத்தில் உள்ளதாகவும் எச்சரித்த இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
எரிபொருள் விலையேற்றம் -  6 வழித்தடங்களில் விமான சேவையை நிறுத்தும் ஏர் இந்தியா!
Published on

சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சில நாடுகளின் வான்வெளி கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை குறைப்பதாகவும், 6 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே சில வழித்தடங்களில் விமான சேவைகளைக் குறைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பும் ஆகஸ்ட் வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

தற்போது நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா, டெல்லி-சிகாகோ, மும்பை-நியூயார்க், டெல்லி-ஷாங்காய், சென்னை-சிங்கப்பூர், மும்பை-டாக்கா மற்றும் டெல்லி-மாலே ஆகிய வழித்தடங்களில் தனது சேவைகளை ஆகஸ்ட் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த 6 வழித்தடங்களின் முழுமையான நிறுத்தம் தவிர, 20-க்கும் மேற்பட்ட சர்வதேச வழித்தடங்களில் விமானங்களின் வாராந்திர இயக்க எண்ணிக்கையை ஏர் இந்தியா குறைத்துள்ளது. இருப்பினும் மாதத்திற்கு 1,200-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இவற்றில் வட அமெரிக்காவிற்கு வாரத்திற்கு 33 விமானங்களும், ஐரோப்பாவிற்கு வாரத்திற்கு 47 விமானங்களும், இங்கிலாந்திற்கு வாரத்திற்கு 57 விமானங்களும், ஆஸ்திரேலியாவிற்கு வாரத்திற்கு 8 விமானங்களும், தூர கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் சார்க் பிராந்தியங்களுக்கு வாரத்திற்கு 158 விமானங்களும், மொரிஷியஸிற்கு வாரத்திற்கு 7 விமானங்களும் இயக்குவது அடங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com