உத்தரகாண்டில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஹெலிகாப்டர் சேவை

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், மலைக்கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களை அவசர காலங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இலவச ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டது.
உத்தரகாண்டில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஹெலிகாப்டர் சேவை
Published on

ருத்ரபிரயாக்:

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், மலைக்கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களை அவசர காலங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இலவச ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், ஜக்கோலி பகுதியைச் சேர்ந்த உதினா என்ற பெண். மாவட்ட மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்.

சாலை வசதி இல்லாத மற்றும் போக்குவரத்து கடினமான குக்கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு, பிரசவ நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மலைக் கிராமங்களில் பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்யவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com