கேரளாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஜூன் 15 முதல் அமல் - முதல்வர் சதீசன் அறிவிப்பு

முதியவர்களுக்கான தனி துறை உருவாக்கப்படும்.
கேரளாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஜூன் 15 முதல் அமல் - முதல்வர் சதீசன் அறிவிப்பு
Published on

கேரள மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி வெற்றி பெற்றது.

இன்று காலை கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் IUML கட்சியை சேர்ந்த 5 பேரும், கூட்டணி கட்சியை சேர்ந்த 4 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பதவி ஏற்பு விழாவில் கார்கே, ராகுல் காந்தி கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பதவியேற்ற பின்னர் சதீசன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த கோப்புகளில் சதீசன் அவர் கையெழுத்திடார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சதீசன், “தேர்தலின்போது நாங்கள் ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அளித்தோம்.

அதில் முதலாவது பெண்களுக்கான இலவச பேருந்து பயணம். வரும் ஜூன் 15ம் தேதி முதல் கேரள அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும்." என்று அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "முதியவர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக முதியவர்களுக்கான தனி துறை உருவாக்கப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊதிய உயர்வு கோரி ஆஷா பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் மாத ஊதியத்தில் ரூ.3,000 உயர்த்தப்படும்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,000, பள்ளிகளில் சமையல் பணியாளர்களுக்கு ரூ.1,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

கேரள சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மே 21 ம் தேதி கூட்ட ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பர். மே 22-ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com