உத்தரகாண்ட் முன்னாள் முதல் மந்திரி காலமானார்

புவன் சந்திர கந்தூரி இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.
உத்தரகாண்ட் முன்னாள் முதல் மந்திரி காலமானார்
Published on

உத்தரகாண்ட் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் புவன் சந்திர கந்தூரி (91). பாஜக மூத்த தலைவரான இவர் 2007 முதல் 2009 ஆண்டு வரையும், 2011 முதல் 2012ம் ஆண்டு வரையும் உத்தரகாண்ட் முதல் மந்திரியாக செயல்பட்டுள்ளார்.

அரசியலில் நுழைவதற்கு முன் புவன் சந்திர கந்தூரி இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் புவன் சந்திர கந்தூரி அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புவன் சந்திர கந்தூரி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com