நடைபாதை வியாபாரிகளுக்காக வீதியில் இறங்கி போராடிய மம்தா பானர்ஜி..!

ரெயில்வே ஸ்டேசன் நடைபாதை வியாபாரிகளை அதிகாரிகள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அவர்களுக்கான மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிமம்தா பானர்ஜி
Published on

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்தது. பாஜக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

நடைபாதை கடைகளை அகற்ற உத்தரவு

பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக ஆட்சி அமைத்ததும், ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் ரெயில்வே ஸ்டேசனில் நடைபாதை வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர். இப்படி பல்வேறு ரெயில்வெ ஸ்டேசனில் நடைபாதையில் கடைகள் வைத்துள்ளனர்.

இவர்களை உடனடியாக காலி செய்யும்படி ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், காலி செய்து கொல்கத்தா அருகே செல்லும்படி வலியுறுத்தியுள்ளது. இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து மம்தா போராட்டம் நடத்த முடிவு செய்தார். அதன்படி இன்று தர்மதலா ஜங்சனில் இருந்து வெலிங்டன் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினார். இதில் ஏராளமான திரிணாமுல காங்கிரஸ் தலைவர்கள் மறறும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com