என் மலர்
இந்தியா

முதல்முறை.. டெல்லி குடியரசு தின விழா எச்சரிக்கை போஸ்டரில் இடம்பெற்ற அல்-கொய்தா பயங்கரவாதி
- ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் பங்கேற்கின்றனர்.
- டெல்லியை சேர்ந்த முகமது ரேஹான் படம் இடம்பெற்றுள்ளது.
வரும் 26 ஆம் தேதி நாட்டின் 77-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி கடமைப் பாதையில் சிறப்பு ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் பங்கேற்கின்றனர்.
கொண்டாட்டங்களை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வழக்கப்படி டெல்லி போலீசார் வெளியிட்டு உள்ள எச்சரிக்கை போஸ்டர்களில் முதன்முறையாக அல்-கொய்தா பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்று இடம் பெற்று உள்ளது.
டெல்லியை சேர்ந்த முகமது ரேஹான் என்ற அந்த நபர் இந்திய துணை கண்டத்தில் அமைந்த அல்-கொய்தா இயக்கத்தின் பயங்கரவாதி என்றும் டெல்லி போலீஸ் மற்றும் உளவு அமைப்புகளால் தேடப்படும் பயங்கரவாதி என்றும் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே யங்கரவாத தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






