துபாயில் திருட்டு போன மாரடோனாவின் ஹுப்லாட் கடிகாரம் அசாமில் மீட்பு

துபாய் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கைக்கடிகாரத்தை இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாசித் ஹூசைன் என்ற நபர் திருடிச் சென்றதாக கண்டறிந்தனர்.
மீட்கப்பட்ட கடிகாரம், கைது செய்யப்பட்ட நபர்
மீட்கப்பட்ட கடிகாரம், கைது செய்யப்பட்ட நபர்
Published on

திஸ்பூர்:

கால்பந்து ஜாம்பவான் டெய்கோ மாரடோனாவிற்கு சொந்தமான பாரம்பரிய ஹூப்லாட் கைக்கடிகாரம் ஒன்று, துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து திருட்டு போனது. மாரடோனாவின் கையெழுத்திடப்பட்ட இந்த கடிகாரம் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த கடிகாரத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

இது குறித்து துபாய் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கைக்கடிகாரத்தை இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாசித் ஹூசைன் என்ற நபர் திருடிச் சென்றதாக கண்டறிந்தனர். துபாயில் உள்ள அந்த நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்த இவர், கடிகாரத்தை திருடிவிட்டு இந்தியாவிற்கு தப்பி ஓடிவிட்டதாக துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அசாம் மாநிலம் சிவசாகர் பகுதியைச் சேர்ந்த வாசித் ஹூசைன், அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com