கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமல்

விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும்.இன்று நள்ளிரவு முதல் கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமல்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில், மீன்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் 52 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

இந்த நாட்களில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

இதைதொடர்ந்து, நீண்ட கரை, தங்கசேரி, அழிக்கல் உட்பட மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலில் இருந்து கரை திரும்பினர். அவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com