பிரதமர் மோடி நாளை திறக்க இருந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து: நிகழ்ச்சி ரத்து- விசாரணைக்கு உத்தரவு

ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க இருந்த நிலையில், இன்று தீ விபத்து ஏற்பட்டது.
பிரதமர் மோடி நாளை திறக்க இருந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து: நிகழ்ச்சி ரத்து- விசாரணைக்கு உத்தரவு
Published on

ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைப்பதாக இருந்தது. இந்த நிலையில் இந்த ஆலையின் கச்சா எண்ணெய் வடிகட்டுதல் பிரிவு (CDU) அருகே இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், பிரதமரின் நாளைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா இன்று சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேற்கொள்ள விருந்த பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேதம் குறித்த மதிப்பீடு நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திறப்பு விழாவுக்கான திருத்தப்பட்ட தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com