சப்போட்டா பழத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 வயது மகளை கொன்ற தந்தை

தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுவாதி தனது இளைய மகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
சப்போட்டா பழத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 வயது மகளை கொன்ற தந்தை
Published on

தெலுங்கானா மாநிலம், யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள லச்சம்ம கூடெம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சுவாதி. இந்த தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுவாதி தனது இளைய மகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மூத்த மகள் மேகனா (வயது 2) தந்தையுடன் இருந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் புகார் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதில் ஏற்பட்ட விரக்தி மற்றும் மகளையும் தன்னை விட்டுப் பிரித்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக, ரவி தனது மகள் மேகனாவை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி சப்போட்டா பழத்தில் விஷம் கலந்து மகளுக்கு கொடுத்துள்ளார். இது தெரியாத அந்த பிஞ்சு குழந்தை அப்பா கொடுத்த அந்த பழகத்தை ஆசை ஆசையாக வாங்கி சாப்பிட்டது. பின்னர் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் ரவியும் விஷத்தை தின்று உள்ளார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com