கியாஸ் சிலிண்டர் குடோனில் வெடிவிபத்து - 4 பேர் பலி

சிலிண்டர்களுக்கு நியூட்ரியன் கியாஸ் நிரப்பும் பணி நடைபெற்று வந்தது.
 கியாஸ் சிலிண்டர் குடோனில் வெடிவிபத்து - 4 பேர் பலி
Published on

யூனியன் பிரதேசமான தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டையூ, டாமனில் சில்வசா நகரில் தொழிற்பேட்டை ஒன்று அமைந்துள்ளது.

இங்கு செயல்பட்டு வந்த கியாஸ் சிலிண்டர் குடோனில் சிலிண்டர்களுக்கு நியூட்ரியன் கியாஸ் நிரப்பும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை குடோனில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் குடோனில் பணியாற்றிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com