கருத்துக் கணிப்புகள் தவறானவை என்பது மீண்டும் நிரூபணம் ஆகும்: பரூக் அப்துல்லா

மேற்கு வங்கத்தில் கடும்போட்டி நிலவினாலும், பாஜக-வுக்கு வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கருத்துக் கணிப்புகள் தவறானவை என்பது மீண்டும் நிரூபணம் ஆகும்: பரூக் அப்துல்லா
Published on

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த மாதம் 9-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க மாநிலத்திற்கும் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு 29-ந்தேதி மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இதில் அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், மேற்கு வங்கத்தால் கடும் போட்டி நிலவும் என்றாலும் பாஜக-வுக்கு சாதகம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மூத்த அரசியல்வாதியும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவிடம் கேள்வி எழுப்பப்படடது. இதற்கு பரூக் அப்துல்லா பதில் அளித்ததாவது:-

நான் எப்போதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நம்புவதில்லை. கடந்த காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தவறு என நிரூபணம் ஆகியுள்ளத. இந்த முறையில் தவறானவை என நிரூபணம் ஆகும்.

இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com