

இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகிய 3 பேர் தேர்வு செய்யும் நடைமுறை இருந்தது. இதை பாஜக தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்ற நீதிபதியை தூக்கிவிட்டு அமைச்சர் ஒருவரை சேர்த்தது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது நீதிபதி தீபங்கர் தத்தா "எனக்கு விசித்திரமாக உள்ளது. சிபிஐ இயக்குநர் தேர்வில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி இருக்கிறார். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல முடியும். அல்லது சட்டத்தின் வழியில் ஆட்சி என்று கூட கூற முடியும். அப்படிஎன்றால், ஜனநாயகம் பராமரிக்கப்பட வேண்டாமா?. தூய்மையான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டாமா?" என்றார்.
மேலும், "அங்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், தனிப்பட்ட சுதந்திரமான நபர் ஏன் இருக்கக் கூடாது. அமைச்சகத்தில் இருந்து ஒருவர் ஏன் இருக்க வேண்டும்.
இன்று பிரதமர் ஒருவரை தேர்வு செய்கிறார். எதிர்க்கட்சி தலைவர் மற்றொருவரை தேர்வு செய்கிறார். அங்கு முரண்பாடு ஏற்படுகிறத. 3-வது நபர் மக்களை எதிர்க்கட்சி தலைவர் முடிவை நோக்கி செல்வாரா?" என்றார்.
அதற்கு அட்டார்னி ஜெனரல், "நடைமுறை ரீதியாகப் பார்த்தால், அது அவ்வாறு இருக்காது. அதை நான் யூகித்து சொல்ல விரும்பவில்லை" என்று தலைமை வழக்கறிஞர் கூறினார்.
"அப்படியென்றால், அனைத்தையும் கட்டுப்படுத்துவது நிர்வாகத் துறைதான்" என்று மற்றொரு நீதிபதி தத்தா உடனடியாகப் பதிலளித்தார்.
இத்தகைய நியமனங்கள் குறித்த முடிவானது, அமைச்சரவை அமைச்சர் பிரதமரின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட வாய்ப்பில்லை என்பதால், நடைமுறையில் 2:1 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்படும் என இந்த பெஞ்ச் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.