VIDEO: கடை தேடி வரும் மாட்டுக்கு தினந்தோறும் தோசை சுட்டு கொடுக்கும் உரிமையாளர்

தினமும் தவறாமல் அந்த மாட்டுக்கு உணவளிக்கும் அந்த கடையின் உரிமையாளரை நெட்டிசன்கள் பாராட்டி பதிவிட்டனர்.
VIDEO: கடை தேடி வரும் மாட்டுக்கு தினந்தோறும் தோசை சுட்டு கொடுக்கும் உரிமையாளர்
Published on

இணையத்தில் பகிரப்படும் சில வித்தியாசமான வீடியோக்கள் பயனர்களை கவர்ந்து வைரலாகும். அந்த வகையில் மாடு ஒன்றிற்கு சாலையோர வியாபாரி தோசை ஊட்டி விடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரகாண்டில் நடைபெற்றதாக கூறப்படும் அந்த வீடியோவில் சாலையோர உணவகம் ஒன்றை தேடி மாடு ஒன்று வருகிறது. அந்த கடையின் உரிமையாளர் அந்த மாட்டுக்கு தோசை ஊற்றுகிறார். இதை அந்த மாடு அமைதியாக பார்த்தவாறு தனது உணவுகாக காத்துக்கொண்டு இருக்கிறது. சிறிது நேரத்தில் கடை உரிமையாளர் 2 தோசைகளை சுட்டு எடுத்துக்கொண்டு அந்த மாட்டின் அருகே சென்று கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடுகிறார். அந்த மாடு தோசைகளை அழகாக சாப்பிடுகிறது.

இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது. இந்த கடையை தேடி நாள்தோறும் அந்த மாடு வருவதாக கூறப்படும் நிலையில், தினமும் தவறாமல் அந்த மாட்டுக்கு உணவளிக்கும் அந்த கடையின் உரிமையாளரை நெட்டிசன்கள் பாராட்டி பதிவிட்டனர். ஒரு பயனர், நந்தி மகாராஜாவுக்கு கடைக்காரர் உபசரிப்பு பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என பதிவிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com