கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

2 இடங்களில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை.முதல்வர் சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு வழக்கு உள்ளது.
கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கடந்த மாதம் இளம் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்டார்.

இந்த கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு வழக்கு உள்ளது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு மருந்துகள் வினியோகம் செய்தவர் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com