என் மலர்
இந்தியா

தலையில் பீர் பாட்டில் வைத்து நடனம் ஆடிய மூதாட்டி- வைரலாகும் வீடியோ
- தலையில் இருக்கும் பீர் பாட்டில் கீழே விழாதவாறு லாவகமாக ஆடுவது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
- வீடியோ 54 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
உணவு விடுதி ஒன்றில் மூதாட்டி ஒருவர் பீர் பாட்டிலை தலையில் வைத்து கொண்டு அமிதாப் பச்சன் படப்பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புடவை கட்டிய அந்த மூதாட்டி, அமிதாப்பச்சனின் 'லாவரிஸ்' படத்தில் இடம்பெற்ற 'மேரே ஆங்னே மே' என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடுகிறார். இடை, இடையே விரல்களை வாயில் வைத்து விசில் அடித்தபடி அவர் நடனம் ஆட, அவருக்கு அருகே ஒரு வாலிபரும் நடனம் ஆடி மூதாட்டியை உற்சாகமூட்டுகிறார்.
தலையில் இருக்கும் பீர் பாட்டில் கீழே விழாதவாறு லாவகமாக ஆடுவது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த வீடியோவை சித்தேஷ் போபாடி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வீடியோ 54 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலர், மூதாட்டியின் நடனத்தை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், பீர் பாட்டிலை தலையில் சுமந்து ஆடுவதை விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.






