மகளிர் விடுதிக்குள் புகுந்து MBA மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 67 வயது முதியவர் கைது | Odisha

பொருட்களை டெலிவரி செய்ய வந்த அந்த மளிகைக் கடைக்காரர் தீபக் பிரதான் (வயது 67), மாணவி தனியாக இருப்பதை கவனித்தார்.
மகளிர் விடுதிக்குள் புகுந்து MBA மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 67 வயது முதியவர் கைது | Odisha
Published on

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தனியார் மகளிர் விடுதியில் தங்கி அங்குள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ பயின்று வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அந்த மாணவியின் அறையில் அவருடன் தங்கியிருந்த தோழி ஊருக்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அந்த மாணவி தனது விடுதிக்கு அருகில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

பொருட்களை டெலிவரி செய்ய வந்த அந்த மளிகைக் கடைக்காரர் தீபக் பிரதான் (வயது 67), மாணவி தனியாக இருப்பதை அறிந்து கொண்டு, உள்ளே புகுந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி சனிக்கிழமை அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மற்றும் இதர ஆதாரங்களின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com