பஞ்சாப் மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத்துறை சோதனை நடந்த நேரத்தில் சஞ்சீவ் அரோரா தனது இல்லத்தில் இல்லை.
பஞ்சாப் மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Published on

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மந்திரி சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். இதையொட்டி பாதுகாப்புக்காக அவரது வீட்டின் வெளியே மத்திய பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

மந்திரி சஞ்சீவ் அரோராவின் தொழில் சார்ந்த பிற சொத்துக்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. நிலம் வாங்கியது தொடர்பாக பண பரிவர்த்தனை நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு காரணமாக இந்த சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.

சோதனையின்போது மந்திரி வீட்டின் வளாகத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சோதனை நடந்த நேரத்தில் சஞ்சீவ் அரோரா தனது இல்லத்தில் இல்லை. ஜலந்தரில் அரோராவின் நெருங்கிய கூட்டாளியும் ரியல் எஸ்டேட் தொழில் அதிபருமான ஹேமந்த் சூட் என்பவருடன் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை குழுக்கள் சோதனைகளை நடத்தின.

கடந்த 2 நாட்களுக்கு முன்புதான், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யும், லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக வேந்தருமான அசோக் மிட்டலுடன் தொடர்புடைய சுமார் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com