

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நேரில் சென்று எச்சரித்தது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 2-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மத்திய பாதுகாப்புப் படையை பாஜக தவறாக பயன்படுத்தி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எச்சரிக்கை விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அஜய் பால் சர்மா. இவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். இவரை தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலம் தேர்தல் பார்வையாளராக நியமித்துள்ளது.
இந்த தொகுதிக்கான பிடிஓ மற்றும் உதவி தேர்தல் அதிகாரி, அஜய் பால் சர்மாவுடன் நேற்று மாலை தேர்தல் பிரசாரம் முடிவடைந்த உடன், அந்த தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜஹாங்கீர் கான் வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்ற அவர்கள் வாக்காளர்களை மிரட்ட முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ வெளியானது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.
சிங்கம் சர்மா எச்சரிக்கை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான், அவர் சிங்கம் என்றால், நான் புஷ்பா எனக் குறிப்பிட்டார்.
புகாரைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.