சட்டம், விதிகளின் அடிப்படையில்தான் நடவடிக்கைகள்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது தேர்தல் செயல்முறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.
ஞானேஷ் குமார்
ஞானேஷ் குமார்
Published on

தேர்தல் ஆணையம் தங்களுக்கு எதிராகப் பாரபட்சமாக நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் சட்டங்கள் மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

தேர்தல் ஆணையத்தின் 260-க்கும் மேற்பட்ட ஊடக மற்றும் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கான தேசிய மாநாட்டில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்திகள், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க முன்கூட்டியே செயல்பட வேண்டும்.

அதிக வாக்குப்பதிவு

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது தேர்தல் செயல்முறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.

அனைத்து ஆணைய நடவடிக்கைகளும் அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் சட்டங்கள் மற்றும் எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் வெளிப்படையாக எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு (AI), டீப்ஃபேக்குகள் மற்றும் நிறுவன நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட செயற்கையான அல்லது தீங்கிழைக்கும் உள்ளடக்கம் போன்ற டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி எச்சரித்தார்.

அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியதோடு, தேர்தல் எழுத்தறிவு மன்றங்கள் (ELCs) மூலம் இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com