

மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் பரவலை, உலக சுகாதார அமைப்பு சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்தது.
இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் எபோலா வைரஸ் நோய் தொடர்பான கண்காணிப்பு மற்றும் தயார் நிலை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
மேலும் விமான நிலையங்களில் எபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.
இதனிடையே, உகாண்டா நாட்டின் கம்பாலா பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
அவருக்கு எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்பெண்ணின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆய்வு முடிவில் அப்பெண்ணுக்கு தொற்று இல்லை என செய்யப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த பெண் தற்போது நல்ல உடல்நிலை உடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.