மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு.. மக்கள் அதிர்ச்சி

நிலநடுக்கத்தை அடுத்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் எதுவும் வெளியாகவில்லை.
மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு.. மக்கள் அதிர்ச்சி
Published on

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் எதுவும் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com