கேரளாவில் மகளின் கண்முன்னே மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்: மதுபோதையில் வெறிச்செயல்

நேற்று இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தீபாவை சுகுமாரன் வெட்டி கொன்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Husband hacks wife to death and dies by suicide in Palakkad
Published on

கேரளா பாலக்காடு பகுதியில் உள்ள அரியம்பாவுவில் சுகுமாரன் என்பவர் தனது மனைவி தீபா மற்றும் 16 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று இரவு கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது மகளின் கண்முன்னே தீபாவை வெட்டி கொன்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் நடந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் கூறியதாவது:-

நேற்று இரவு மதுபோதையில் இருந்த சுகுமாரன், தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, இரவு 8:30 மணியளவில் தனது மகளின் கண்முன்னே மனைவி தீபாவை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

அதைத் தொடர்ந்து சுகுமாரன் அதே ஆயுதத்தால் தன்னைத்தானே தாக்கிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த தீபாவை மீட்டு மன்னார்காட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு இறந்த இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com