ULPGM-V3 ஏவுகணை சோதனையில் DRDO வெற்றி!

வான்வழியில் பறக்கும் எதிரி ட்ரோன்களை அழிக்கவும், தரைப்பகுதியில் உள்ள பீரங்கி எதிர்ப்பு இலக்குகளை அழிக்கவும் இந்த ஏவுகணை பயனுள்ளதாக இருக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ULPGM-V3 ஏவுகணை சோதனையில்  DRDO வெற்றி!
Published on

இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), (ULPGM)-V3-இன் இறுதி மேம்பாட்டுச் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல் அருகே உள்ள DRDO சோதனைத் தளத்தில், ULPGM ஆயுத அமைப்பைக் கட்டளையிடவும் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த தரை கட்டுப்பாட்டு அமைப்பைப் (GCS) பயன்படுத்தி இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த GCS, தயார்நிலை மற்றும் ஏவுதல் செயல்பாடுகளைத் தானியக்கமாக்குவதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுதாகும்.

மேலும் வான்-தரை மற்றும் வான்-வான் ஆகிய இரண்டு முறைகளிலும் இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆற்றலை இந்த ஏவுகணை கொண்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வான்வழியில் பறக்கும் எதிரி ட்ரோன்களை அழிக்கவும், தரைப்பகுதியில் உள்ள பீரங்கி எதிர்ப்பு இலக்குகளை அழிக்கவும் இந்த ஏவுகணை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் உற்பத்தி கூட்டாளிகள், மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com