கர்நாடகா முதல்வராக பதவியேற்கும் முன் தாயாரிடம் ஆசி பெற்றார் டி.கே.சிவகுமார்

"முதல் கட்டமாக அவரது அமைச்சரவையில் 10 முதல் 15 அமைச்சர்கள் வரை பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது"
DK Shivakumar received his mother's blessings
Published on

கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள டி.கே.சிவகுமார், இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக தனது தாயார் கவுரம்மாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இன்று மாலை 4.05 மணிக்கு லோக் பவனில் உள்ள கிளாஸ் ஹவுஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில், கர்நாடகாவின் 18-வது முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்க உள்ளார். முதல் கட்டமாக அவரது அமைச்சரவையில் 10 முதல் 15 அமைச்சர்கள் வரை பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில், கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட், டி.கே. சிவகுமார் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக தனது தாயாரின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்ட டி.கே. சிவகுமார், புதிய பொறுப்பை ஏற்கும் முன் குடும்ப மரபின்படி இந்த சந்திப்பை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com