55 வருடங்களுக்கு முன் 2 ஆக பிரிக்கப்பட்டது: இம்முறை., பாகிஸ்தான் அமைச்சருக்கு ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை

மேற்கு வங்கத்தின் மீது பார்வை வைத்தால், இம்முறை பாகிஸ்தான் எத்தனை பகுதியாக பிரியும் என்று கடவுளுக்குதான் தெரியும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
55 வருடங்களுக்கு முன் 2 ஆக பிரிக்கப்பட்டது: இம்முறை., பாகிஸ்தான் அமைச்சருக்கு ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை
Published on

பாகிஸ்தான் எதிராக போலி முத்திரை குத்தி இந்தியா நடவடிக்கை எடுத்தால், எங்களது பதிலடி கொல்கத்தா வரை இருக்கும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அமைச்சர் இவ்வாறு கூறியதற்கு மத்திய அரசு சரியான வகையில் எதிர்வினை ஆற்றவில்லை. மோடி அமைதியாக இருக்கிறார். மேற்கு வங்க மக்கள் மீது கை வைத்தால் நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார் என மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கவாஜா ஆசிஃப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இதுபோன்று ஆத்திரமூட்டும் கருத்தை தெரிவித்திருக்கக் கூடாது. 55 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் விளைவுகளை சந்தித்தார்கள். பாகிஸ்தான் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

அவர்கள் மேற்கு வங்கத்தின் மீது பார்வை வைத்தால், இம்முறை பாகிஸ்தான் எத்தனை பகுதியாக பிரியும் என்று கடவுளுக்குதான் தெரியும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com