கோவிலுக்குள் நுழைவதில் பிரச்சனை.. பெண்ணை அரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய கும்பல்

வழியில் இருந்த பலரின் கால்களிலும் அவர்களை விழுந்து கும்பிடுமாறு அவர்களை அந்த கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது.
கோவிலுக்குள் நுழைவதில் பிரச்சனை.. பெண்ணை அரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய கும்பல்
Published on

மகாராஷ்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் வாக்ரி நகர் பகுதியில் ராஜ்புத் சமூக குடும்பம் ஒன்று வசித்து வந்தது.

இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கோவிலுக்குள் நுழைய கூடாது என உள்ளூர் சாதி பஞ்சாயத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

நேற்று, அந்தச் கோவிலில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் தடையை மீறி நுழைந்துள்ளார்.

இது அங்கு நின்றிருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அந்த இளைஞர் கோவிலுக்குள் சென்றதைத் தொடர்ந்து, எதிர் தரப்பினர் கம்பிகள் மற்றும் தடிகளுடன் அக்குடும்பத்தின் வீட்டிற்கு மீது தாக்குதல் நடத்தினர்.

வீட்டில் இருந்த ஆண்களை தாக்கியதோடு மட்டுமின்றி, பெண்களையும் தாக்கி, இதுகுறித்து போலீசாரிடம் சென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளனர்.

அக்குடும்பத்தை சேர்ந்த பெண், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது வழியிலேயே அவரை வழிமறித்த சில பெண்கள் அடங்கிய கும்பல், அவரின் உடைகளைக் கிழித்து, அரை நிர்வாணப்படுத்தியுள்ளனர். கத்தரிக்கோலால் முடியை வெட்டியுள்ளனர்.

அவரின் கழுத்தில் செருப்பு மாலை மாட்டி, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த ஊர்வலத்தின் போது, வழியில் இருந்த பலரின் கால்களிலும் விழுந்து கும்பிடுமாறு அவரை அந்த கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது.

சுற்றியிருந்தவர்கள் தடுத்து நிறுத்தாமல் தங்களது மொபைல் போன்களில் வீடியோ மட்டுமே எடுத்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகாரின் பேரிலும், வீடியோக்கள் அடிப்படையிலும் 7 பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com