என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிப்பு
    X

    டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிப்பு

    • மதராஸி முகாம் பகுதியில் கால்வாயை ஒட்டி உள்ள குடியிருப்புகளை இடிக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
    • 50 கி.மீ. தொலைவில் வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு இடம் பெயர்ந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தமிழர்கள் தெரிவித்தனர்.

    டெல்லி ஜங்க்புரா பகுதியில் சுமார் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வரும் மதராஸி முகாமில் உள்ள குடிசை வீடுகள் இடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக குடியிருப்புகளை இடிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது.

    மதராஸி முகாம் பகுதியில் கால்வாயை ஒட்டி உள்ள குடியிருப்புகளை இடிக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

    மதராஸி முகாமில் வசித்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 50 கி.மீ. தொலைவிற்கு அப்பால் தமிழர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    50 கி.மீ. தொலைவில் வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு இடம் பெயர்ந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், ஜங்க்புராவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த தங்களை வெளியேற்றுவதாகவும் தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.

    Next Story
    ×