

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஓடுபாதையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருந்தது.
அதே நேரத்தில், டெல்லியில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக ஆகாசா ஏர் விமானம் பயணிகளுடன் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது.
நகர்ந்து சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் வலது சிறகு, நின்று கொண்டிருந்த ஆகாசா ஏர் விமானத்தின் வால் பகுதியில் பலமாக மோதியது. இதில் இரண்டு விமானங்களின் பாகங்களும் சேதமடைந்தன.
விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர். ஐதராபாத் செல்ல வேண்டிய பயணிகளுக்காக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சேதமடைந்த இரண்டு விமானங்களும் ஆய்விற்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.