டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 46 சதவீத வேட்பாளர்கள் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்கள்

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடக்கிறது.70 தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 46 சதவீத வேட்பாளர்கள் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்கள்
Published on

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடக்கிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் வேட்புமனுவுடன் தங்களது கல்வித்தகுதியையும் குறிப்பிட்டு உள்ளனர். அந்த விவரங்களை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், 46 சதவீத வேட்பாளர்கள், அதாவது 324 வேட்பாளர்கள் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 5-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புக்குள்தான் அவர்கள் படித்துள்ளனர். இன்னும் 322 வேட்பாளர்கள் உயர்கல்வி படித்துள்ளனர். அவர்களில், 126 பேர் இளங்கலை பட்டப்படிப்பும், 104 பேர் முதுகலை பட்டப்படிப்பும், 84 பேர் தொழில்நுட்ப படிப்பும், 8 பேர் ஆய்வுப்படிப்பும் படித்துள்ளனர்.

18 பேர் டிப்ளமோ படித்துள்ளனர். 6 பேர், முறையான பள்ளிப்படிப்பு இல்லாமல் படித்திருப்பதாகவும், 29 பேர் தங்களை படிப்பறிவு இல்லாதவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com