டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

டென்மார்க் பிரதமரான மேட் பிரெடெரிக்சன் நேற்று மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார்.பிரதமரை தாக்கிய நபரை கைதுசெய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
Published on

புதுடெல்லி:

டென்மார்க் பிரதமராக மேட் பிரெடெரிக்சன் பதவி வகித்து வருகிறார். இவர் டென்மார்க்கின் மத்திய கோபன்ஹெகன் குல்டோர்வெட் சதுக்கத்தில் நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். பிரதமரை தாக்கிய நபரை கைதுசெய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய யூனியன் தேர்தல் டென்மார்க்கில் இன்னும் இரு நாட்களில் நடைபெற உள்ள நிலையில், டென்மார்க் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டென்மார்க் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டென்மார்க் பிரதமர் மேட் பிரெடெரிக்சன் மீதான தாக்குதல் பற்றிய செய்தி அறிந்து கவலை அடைந்தேன். தாக்குதலை கண்டிக்கிறோம். எனது நண்பர் நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com