

மத்திய அரசின் விடுமுறை தின மாற்றத்தைத் தொடர்ந்து, மே 28 அன்று நடைபெறவிருந்த பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகைக்கான அரசு பொது விடுமுறைத் தேதியை மத்திய பணியாளர் நலத்துறை மாற்றியமைத்துள்ளது.
மே 28 அன்று காலை மற்றும் மாலை என இரண்டு ஷிஃப்டுகளிலும் நடக்கவிருந்த தேர்வுகள் மட்டுமே தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மே 28-ஐத் தவிர, முன்னரே திட்டமிடப்பட்ட மே 11 முதல் மே 31 வரையிலான பிற க்யூட் (CUET) தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம்போல் நடைபெறும்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான மாற்றுத் தேர்வு தேதிகள் மற்றும் புதிய ஹால் டிக்கெட் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மாணவர்கள் புதிய தகவல்களுக்கு NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (cuet.nta.nic.in) தொடர்ந்து கண்காணிக்கவும், சந்தேகங்களுக்கு NTA உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தேர்வு இந்தியாவின் புதிய தேசிய கல்விக்கொள்கை 2020-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தேர்வின் நோக்கம் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இன்றி அனைத்து மாணவர்களும் சமம் என்ற முறையில் நடத்தப்படுகிறது.