CUET- PG நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு... ரிசல்ட் செக் செய்வது எப்படி?

மொத்தம் 198 பல்கலைக்கழகங்களில் உள்ள 157 பாட பிரிவுகளில் சேரக்கை இந்து நுழைவு தேர்வு மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
CUET- PG நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு... ரிசல்ட் செக் செய்வது எப்படி?
Published on

நாட்டின் பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான CUET PG 2026 தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 6 முதல் 27 வரை நடைபெற்ற இந்தத் தேர்வின் முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

exams.nta.ac.in/CUET-PG என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

முகப்புப் பக்கத்தில், CUET PG 2026 result என்ற இணைப்பைக் கிளிக் செய்து விண்ணப்ப பதிவெண், பிறந்த தேதி ஆகிவற்றை சமர்ப்பிக்க வேண்டும். CUET PG 2026 மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும் .எதிர்கால தேவைக்குப் பயன்படும் என்பதால், அதை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும்.

கணினி அடிப்படையிலான இந்தத் தேர்வில் 157 வெவ்வேறு பாடப் பிரிவுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் 45 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 40 மாநில பல்கலைக்கழகங்கள், 24 அரசு நிறுனனங்கள், 89 தன்னாட்சிப் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 198 பல்கலைக்கழகங்களில் உள்ள 157 பாட பிரிவுகளில் சேரக்கை இந்து நுழைவு தேர்வு மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் விரைவில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைமுறைகளைத் தொடங்கும்.

மாணவர்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகிறீர்களோ, அந்தப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடப்பிரிவிற்குமான கட்-ஆஃப் மதிப்பெண்களை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் பின்னர் அறிவிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com