இதையும் விட்டுவைக்கலையா... சுடுகாட்டில் திருமணம் செய்து கொண்ட ஜோடி

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுடுகாட்டை தேர்ந்தெடுத்தனர்.
இதையும் விட்டுவைக்கலையா... சுடுகாட்டில் திருமணம் செய்து கொண்ட ஜோடி
Published on

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும். திருமணத்தில் ஒரு கிக் இருக்க வேண்டும் என நினைத்தனர். அவர்களுக்கு ஒரு விசித்திரமான யோசனை தோன்றியது.

அந்தத் தம்பதியினர் சுடுகாட்டில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்காக, அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுடுகாட்டை தேர்ந்தெடுத்தனர். சுடுகாட்டின் நடுவே தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இந்தத் திருமணத்திற்கு 50 விருந்தினர்கள் வரை வந்திருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் இந்தக் காணொளிக்குக் கலவையான முறையில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com