இந்தியாவில் தனிநபர் வாழ்க்கை செலவு: Costly நகரம் மும்பை - அப்போ சென்னை? - பட்டியல் வெளியீடு | Cost of living

சென்னையில் வாடகையை தவிர்த்து ஒரு நபருக்கு மாதம் ரூ.15000 முதல் ரூ.50000 வரை செலவாகிறது.
இந்தியாவில் தனிநபர் வாழ்க்கை செலவு: Costly நகரம் மும்பை - அப்போ சென்னை? - பட்டியல் வெளியீடு | Cost of living
Published on

இந்தியாவின் பெருநகரங்களில் வாழ்வது மேலும் மேலும் கடினமாகி வருகிறது.

அதிகரித்த வீட்டு வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளால் சாமானிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்தச் சூழலில், உலக நகரங்களின் வாழ்க்கைச் செலவு புள்ளிவிவரங்களை ஆய்வு செய்யும் நம்பியோ (Numbeo) என்ற அமைப்பு, 2026-ஆம் ஆண்டின் நிலவரங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஒரு தனிநபர் வாடகையை சேர்க்காமல், வாழ்வதற்கு மாதம் சுமார் ரூ.27,300 தேவைப்படுகிறது. இதுவே நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சுமார் ரூ.98,000 ஆக உள்ளது.

நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பை இந்தப் பட்டியலில் வாழ்வதற்கு மிகவும் விலை உயர்ந்த நகரமாக முதலிடத்தில் உள்ளது. அங்கு வாடகையை தவிர்த்து ஒரு நபருக்கு ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை செலவாகிறது.

மும்பைக்கு அடுத்தபடியாக, டெல்லி, புனே, பெங்களூரு, ஐதராபாத் ஆகியவை மிகவும் விலை உயர்ந்த நகரங்களாக உள்ளன.

அதற்கடுத்தபடியாக 6வது இடத்தில் சென்னை உள்ளது. சென்னையில் வாடகையை தவிர்த்து ஒரு நபருக்கு மாதம் ரூ.15000 முதல் ரூ.50000 வரை செலவாகிறது.

அனைத்து பெருநகரங்களிலும் கொல்கத்தா மிகவும் மலிவான நகரம் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அங்கு ஒரு நபருக்கு வாடகையை தவிர்த்து ரூ.20,000 முதல் 40,000 வரை செலவாகிறது.

இந்த செலவுகளில் உணவு, போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் அடங்கும்.

வேலையின்மை

இதற்கிடையே 2004-ல் 32 சதவீதமாக (30 லட்சம்) இருந்த வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை, 2023-ல் சுமார் 1.10 கோடியாக (67 சதவீதம்) உயர்ந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் உயரவில்லை. இதன் விளைவாக, வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, வருமான வளர்ச்சியும் மந்தமடைந்துள்ளது என்று பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com