search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோரமண்டல் ரெயில் விபத்தும்.... வெள்ளிக்கிழமையும்
    X

    கோரமண்டல் ரெயில் விபத்தும்.... வெள்ளிக்கிழமையும்

    • கடந்த 21 வருடங்களில் நான்கு முறை விபத்தை சந்தித்துள்ளது
    • இந்த முறை இரண்டு ரெயில்களுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹனாகா பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்தில் 3 ரெயில்கள் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த ரெயில் விபத்துக்கு முக்கிய காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது கோரமண்டல் ரெயில் மோதி பெட்டிகள் தடம் புரண்டதுதான் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கோரமண்டல் ரெயில் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் மூன்று முறை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை 21 தற்போது நடைபெற்றது 4-வது முறையாகும்.

    2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நெல்லூர் மாவட்டம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். நெல்லூர் அருகே மோசமான மெயின் லைன் காரணமாக விபத்து நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    2009-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி ஒடிசா மாநிலம் ஜாஜ்புர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தண்டவாளம் மாறும்போது விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். அதிவேகமாக சென்ற நிலையில் தண்டவாளம் மாறியதால் ரெயில் இன்ஜின் தலைகீழாக கவிழ்ந்தது.

    2011-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நெல்லூர் மாவட்டம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் 32 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    தற்போது 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பயணிகள் ரெயில் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 280-ஐ கடந்துள்ளது.

    இதில் உள்ள விசித்திரமான விசயம் என்னவெனில் இந்த விபத்துக்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமையிலேயே நடந்துள்ளது. ஒருவேளை கோரமண்டல் ரெயிலுக்கும் வெள்ளிக்கிழமையும் ஆகாமல் இருக்குமோ?.

    எதுவாக இருந்தாலும் தொழில்நுட்பமும், மனிதத் தவறும் நடைபெறாமல் இருந்தால விபத்துக்களை தடுக்கலாம்.

    Next Story
    ×